< Back
உலக செய்திகள்
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலி!
உலக செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலி!

தினத்தந்தி
|
6 Sept 2022 7:06 AM IST

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஓகாடவ்கோ,

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 37 பேர் படுகாயமடைந்தனர்.

தலைநகர் ஓகாடவ்கோ நோக்கி வந்த ஒரு வண்டியில் இருந்த குண்டு வெடித்தது.பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றில் இருந்து திடீரென வெடிகுண்டு வெடித்தது.

கடந்த பத்தாண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ முழுவதும் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.அல் கொய்தா மற்றும் டேஷுடன் தொடர்பு கொண்ட குழுக்கள் அங்கு தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி பல பேரை கொன்று வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட கடும் உணவுத்தட்டுப்பாடு காரணமாக புர்கினா பாசோவில் 10 பேரில் ஒருவர் சண்டையால் இடம்பெயர்ந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.9 மில்லியன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் செய்திகள்