< Back
உலக செய்திகள்
பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 25 பேர் பலி
உலக செய்திகள்

பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 25 பேர் பலி

தினத்தந்தி
|
17 Jun 2023 1:19 PM IST

பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

கம்பலா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காங்கோ எல்லையோரம் உள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் உயிரிழந்தனரா? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்