< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி
|25 Sept 2022 5:05 PM IST
வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர்.
டாக்கா,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 23 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததா? எல்லது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கவிழ்ந்ததா என்ற விவரம் தெரியவில்லை. மேலும் 12 பேர் மாயமாகி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.