< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இத்தாலியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி
|4 Oct 2023 4:52 AM IST
இத்தாலியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
வெனிஸ் (இத்தாலி),
வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரெயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், நான்கு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.