< Back
உலக செய்திகள்
சூடானின் கார்டூமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி
உலக செய்திகள்

சூடானின் கார்டூமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி

தினத்தந்தி
|
18 Jun 2023 2:08 AM IST

சூடானின் கார்டூமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

சூடான்,

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்து உள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில் சூடானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.

சூடான் இராணுவத்திற்கும், பாராமிலிட்டரி விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையேயான சண்டையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூடானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, காயமடைந்த பொதுமக்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 வீடுகள் முற்றிலு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் ஐந்து குழந்தைகள் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்