மெக்காவில் வெப்ப அலைக்கு இதுவரை 1,301 பேர் பலி
|மெக்காவில் வெப்ப அலைக்கு இந்தியர்கள் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்கா,
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வெப்ப அலைக்கு மொத்தம் 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா சுகாதாரத்துறை மந்திரி பஹத் பின் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 660 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்தியர்கள் 98 பேரும், இந்தோனேசியாவை சேர்ந்த 165 பேரும் இறந்து உள்ளனர். மேலும் ஜோர்டான், துனிசியா,மொரோக்கோ, அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளும் வெப்ப அலைக்கு இறந்து விட்டனர். இதில் முறையான பாதுகாப்பு இல்லாமல் நீண்ட தூரம் நடந்து வந்தவர்களும், வயதானவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம் பேர் ஆவார்கள். மேலும் ஹஜ் புனித யாத்திரைக்கு புதிவு செய்யாமல் வந்த பலரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.