ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் செயற்குழு கூட்டம் - பெய்ஜிங்கில் நடைபெற்றது
|இந்த கூட்டத்தில் பசுமை பொருளாதார மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பெய்ஜிங்,
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஆசியா பசிபிக் பொருளதார ஒத்துழைப்பு அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிராந்திய அதிகாரிகள் மற்றும் வணிக தலைவர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். இதில் பசுமை பொருளாதார மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆசியா பசிபிக் பகுதியில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று தாய்லாந்து பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதே போல் மின்னணு வணிகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்டவற்றில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த தாய்லாந்து தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.