< Back
உலக செய்திகள்
இலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்

கோப்புப்படம்

உலக செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்

தினத்தந்தி
|
4 April 2024 12:33 AM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

கொழும்பு,

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை சர்ச்சைக்குரிய ஒன்றாக தொடர்கிறது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை வாடிக்கையாக கொண்டுள்ளது.

சில சமயங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை அரசு விடுவித்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 19 பேரும் நேற்று கொழும்புவில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 19 தமிழக மீனவர்களை இலங்கை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்