< Back
உலக செய்திகள்
பொலிவியாவில் வலது சாரி கவர்னர் கைது - எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
உலக செய்திகள்

பொலிவியாவில் வலது சாரி கவர்னர் கைது - எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
1 Jan 2023 1:54 PM GMT

கவர்னர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வலது சாரி ஆதரவாளர்கள் பொலிவியாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

லா பாஸ்,

பொலிவியா நாட்டில் உள்ள சாண்டா குரூஸ் மாகாணத்தின் வலது சாரி கவர்னரான லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பொலிவியா நாட்டில் அதிபர் லூயிஸ் அக்ரே தலைமையிலான இடது சாரி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கு எதிராக கவர்னர் கமாச்சோ தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்த சூழலில் கமாச்சோ மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து வலது சாரி ஆதரவாளர்கள் பொலிவியாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சாண்டா குரூஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது. கைது செய்யப்பட்டுள்ள கமாச்சோவுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்