< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவம்
|18 Oct 2023 5:15 AM IST
பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்,
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சரமாரி தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். பின்னர் அவர்களது முகாம் கைப்பற்றப்பட்டு அங்கிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு ராணுவ வீரர்களும் பலியாகினர்.