< Back
உலக செய்திகள்
ஈகுவடார்: ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் - 10 பேர் பலி
உலக செய்திகள்

ஈகுவடார்: ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் - 10 பேர் பலி

தினத்தந்தி
|
1 May 2023 4:11 AM IST

ஈகுவடாரில் போதைப்பொருள் கும்பல் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

கியுடா,

ஈகுவடார் நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் உள்ளது. இந்த கும்பல்கள் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய துறைமுக நகரான கவ்யாகியுல் நகரில் நேற்று இரவு ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்