< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை பிரிட்ஜில் வைத்திருந்த பெண்

image via Maricopa County Sheriff's Office

உலக செய்திகள்

அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை பிரிட்ஜில் வைத்திருந்த பெண்

தினத்தந்தி
|
26 Sept 2023 5:12 AM IST

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டின் பிரிட்ஜில் இறந்துபோன 5 நாயின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பிரிட்ஜில் இறந்துபோன 5 நாயின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 55 நாய்கள் அந்த வீட்டில் மோசமான நிலையில் இருந்தன. அவற்றை போலீசார் உடனடியாக மீட்டு விலங்குகள் நல காப்பகத்தில் கொண்டு போய் விட்டனர். இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரான மெக்லாலினை (வயது 48) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்