< Back
உலக செய்திகள்
இஸ்ரேலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு கொலை
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு கொலை

தினத்தந்தி
|
29 Sept 2023 2:25 AM IST

இஸ்ரேலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜெருசலேம்,

வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள ஒரு வீட்டில் மா்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்