< Back
உலக செய்திகள்
துருக்கியில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து 7 பேர் படுகாயம்

கோப்புப்படம் 

உலக செய்திகள்

துருக்கியில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து 7 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
3 Jun 2024 6:22 AM IST

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று திடீரென சரிந்து விழுந்தது.

அங்காரா,

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் கட்டிடம் நேற்று திடீரென சரிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மேலும் பஸ் ஏற காத்திருந்த பயணிகள் மீதும் அந்த கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்தன.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்