< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்
|15 Oct 2023 12:36 PM IST
ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காபூல்,
வடமேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.36 மணிக்கு 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வடமேற்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹெராட் நகரின் வடமேற்கே 30 கி.மீ தொலைவில் இருந்தது. ஹெராட் நகரம் ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.