< Back
உலக செய்திகள்
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
உலக செய்திகள்

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

தினத்தந்தி
|
9 Jan 2024 3:15 PM IST

ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹோன்சு,

ஜப்பான் நாட்டில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

மேலும் செய்திகள்