< Back
உலக செய்திகள்
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
உலக செய்திகள்

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
9 May 2024 6:21 PM IST

அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது. இதனையொட்டி அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்