< Back
உலக செய்திகள்
தன்னை கடித்த எலியை பழிவாங்கிய கல்லூரி மாணவி
உலக செய்திகள்

தன்னை கடித்த எலியை பழிவாங்கிய கல்லூரி மாணவி

தினத்தந்தி
|
2 Jan 2024 3:04 PM IST

எலி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பீஜிங்,

சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவியை எதிர்பாராதவிதமாக எலி ஒன்று கடித்துள்ளது. அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து வெறித்தனமாக கடித்து வைத்துள்ளார். அதன் கழுத்து பகுதியில் பலமாக கடித்து தனது கோபத்தை தீர்த்துக்கொண்டார். அந்த மாணவியின் வெறித்தனமான கடியால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது.

எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல யாரும் செய்ய வேண்டாம் என அந்த மாணவியின் தோழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்