< Back
தேசிய செய்திகள்
ரஷியா சென்ற இந்திய பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்தா? - மத்திய அரசு மறுப்பு
தேசிய செய்திகள்

ரஷியா சென்ற இந்திய பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்தா? - மத்திய அரசு மறுப்பு

தினத்தந்தி
|
21 Jan 2024 1:16 PM IST

ரஷியா சென்ற இந்திய பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணம் சிபக் மாவட்டத்தில் உள்ள டாப்கானா மலைப்பகுதியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.

மீட்புப்பணிக்காக அதிகாரிகள் விரைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, விபத்துக்குள்ளான விமானம் எந்த நிறுவனத்தை சேர்ந்தது? விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவை சேர்ந்ததல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானமும் அல்ல, இந்தியாவில் இருந்து சென்ற விமானமும் அல்ல. விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டை சேர்ந்த சிறிய விமானம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்