< Back
உலக செய்திகள்
ரஷிய அதிபர் புதின் மீது நம்பிக்கை இல்லை -  90 சதவீத மக்கள் கருத்து..!
உலக செய்திகள்

ரஷிய அதிபர் புதின் மீது நம்பிக்கை இல்லை - 90 சதவீத மக்கள் கருத்து..!

தினத்தந்தி
|
23 Jun 2022 11:41 AM IST

உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வு ஆனார்.

வாஷிங்டன்,

உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வு ஆனார். இதி தொடர்பான கருத்துக்கணிப்பு ஆய்வு, 18 நாடுகளில் நடத்தப்பட்டது. பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வின்படி, பல நாடுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

18 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சராசரியாக 90 சதவீத மக்கள், உலக விவகாரங்களில் புதின் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்று தங்களுக்கு நம்பிக்கை இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கிட்டத்தட்ட பத்தில் எட்டு பேர் (78%) புதின் மீது நம்பிக்கை இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். 18 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 85 சதவீதம் பேர் ரஷியாவைப் பற்றி எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த இருபது ஆண்டுகளாக, புதின் மீதான மதிப்பீடு பல நாடுகளில் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன. ஆனால் 2022 இல், உக்ரைன் மீதான ரஷிய போருக்கு பின்னர், இந்த எண்ணிக்கை மிகக் குறைந்த அளவை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்