< Back
உலக செய்திகள்
கஞ்சா வைத்திருந்ததாகப் பிரபல மாடல் அழகி கைது...!

image courtesy;AFP

உலக செய்திகள்

கஞ்சா வைத்திருந்ததாகப் பிரபல மாடல் அழகி கைது...!

தினத்தந்தி
|
19 July 2023 12:46 PM IST

கஞ்சா வைத்திருந்ததாகப் பிரபல அமெரிக்க மாடல் அழகி கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்றார்.

ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஜிகி ஹடிட் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது. நன்றாகவே முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்