< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
என்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி - இம்ரான்கான்

4 May 2024 3:54 AM IST
இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
எனக்கு எதிராக ராணுவம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. இப்போது என்னை கொலை செய்வதுதான் அவர்களுக்கு மிச்சம். எனக்கோ அல்லது என் மனைவிக்கோ (புஷ்ரா பீபி) ஏதேனும் நேர்ந்தால், ராணுவ தளபதி அசிம் முனீர் தான் பொறுப்பு என்று நான் பகிரங்கமாக கூறுகிறேன். ஆனால் என் நம்பிக்கை பலமாக இருப்பதால் நான் பயப்படவில்லை. அதே சமயம் நான் அடிமைத்தனத்தை விட மரணத்தை விரும்புகிறேன்.
இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.