< Back
உலக செய்திகள்
இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முன்னணி நாடான அல்ஜீரியா ரஷியாவின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளதாக தகவல்
உலக செய்திகள்

இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முன்னணி நாடான அல்ஜீரியா ரஷியாவின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளதாக தகவல்

தினத்தந்தி
|
1 Aug 2022 5:06 PM IST

அல்ஜீரியா, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளதாக அந்நாட்டு அதிபர் அப்டெல்மட்ஜித் டெபோன் தெரிவித்தார்.

அல்ஜீர்ஸ்,

ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிக அளவு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடாக திகழும் அல்ஜீரியா, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய உள்ளதாக அந்நாட்டு அதிபர் அப்டெல்மட்ஜித் டெபோன் தெரிவித்தார்.

உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் சீனா, ரஷியா முக்கிய அங்கம் வைக்கின்றன. உலக நாடுகள் பல ரஷ்ய மீது பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் ரஷ்ய அதிபர் புதின் பிரிட்க்ஸ் அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது பரந்த அளவிலான ஒருங்கிணைந்த தொடர்புடன் பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்க வேண்டும் என்று கூறினார்.

இதன் அடிப்படையில் அல்ஜீரியா பிரிட்க்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஒட்டுமொத்த உலக ஜிடிபியில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் நான்கில் ஒரு பங்கை வழங்கி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற காணொலி வாயிலான பிரிக்ஸ் மாநாட்டில் அல்ஜீரியா நாட்டின் அதிபர் அப்டெல்மட்ஜித் டெபோன்

பங்கேற்றார். தற்போது பொருளாதார தடைகளால் தவித்து வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதின் புதிய சந்தைகளை, புதிய வாய்ப்புகளை தேடி வருகிறார். அதன் அடிப்படையில் பிரிக்ஸ் கூட்டமைப்பை மேலும் வலுவாக மாற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை சேர்த்திட அவர் முயற்சித்து வருகிறார்.

மேலும் உக்ரைன் போர் நடைபற தொடங்கிய போது ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து சம்மதம் தெரிவிக்காமல் மவுனம் காத்த நாடுகளில் சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்காவுடன் இணைந்து அல்ஜீரியாவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் அல்ஜீரியா ரஷியாவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

மேலும் செய்திகள்