< Back
உலக செய்திகள்
இங்கிலாந்து: ஏர் இந்தியா பெண் ஊழியர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட நபர்
உலக செய்திகள்

இங்கிலாந்து: ஏர் இந்தியா பெண் ஊழியர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட நபர்

தினத்தந்தி
|
18 Aug 2024 1:22 PM IST

இங்கிலாந்தில் ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர் தங்கிருந்த அறைக்குள் நுழைந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்,

இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளது. பின்னர், இந்தியா திரும்பவதற்குமுன் ஏர் இந்தியா விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் லண்டனில் உள்ள ரெடிசன் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான ஊழியாரன பணிப்பெண் தங்கி இருந்த ஓட்டல் அறைக்குள் நள்ளிரவு மர்ம நபர் நுழைந்துள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் பெண் ஊழியர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பணிப்பெண்ணை தாக்கியுள்ளார்.

இதையடுத்து பெண் ஊழியர் கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்த அறைகளில் தங்கி இருந்த சக ஊழியர்கள் விரைந்து வந்து பணிப்பெண்ணை மீட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து லண்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்