< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கையில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: 2 வீரர்கள் சாவு
|8 Aug 2023 2:17 AM IST
விமானத்தில் இருந்த விமானி மற்றும் விமானப்படை அதிகாரி என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொழும்பு,
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திரிகோணமலையில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலையில் வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது.
காலை 11.25 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் 2 நிமிடங்களில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் விமானப்படை அதிகாரி என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பி.டி.6 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் சீனாவில் இருந்து வாங்கப்பட்டது ஆகும்.