< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு
|1 Dec 2022 1:11 PM IST
குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காபுல்,
ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாண தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.