< Back
உலக செய்திகள்
இலங்கையில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை - 50 நாட்களில் 56,000 பேர் கைது
உலக செய்திகள்

இலங்கையில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை - 50 நாட்களில் 56,000 பேர் கைது

தினத்தந்தி
|
6 Feb 2024 3:29 PM IST

குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை போலீசார் தேசிய குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு,

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய குற்றத்தடுப்பு நடவடிக்கையை இலங்கை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி தொடங்கினர்.

இந்த நடவடிக்கையின் மூலம், நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 56,000 நபர்களை 50 நாட்களில் போலீசார் கைது செய்துள்ளதாக இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்களில் 49,558 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும், மீதம் உள்ள நபர்கள் மற்ற குற்றச்செயல்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2.3 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்