< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் நூதன முறையில் போதை பொருள் கடத்த முயன்ற பெண்

Image Courtesy:  Indiatoday

உலக செய்திகள்

அமெரிக்காவில் நூதன முறையில் போதை பொருள் கடத்த முயன்ற பெண்

தினத்தந்தி
|
20 Nov 2022 2:40 PM GMT

அமெரிக்காவில் சக்கர நாற்காலியின் சக்கரத்தில் மறைத்து நூதன முறையில் போதை பொருளை கடத்த முயன்ற டொமினிக்கன் குடியரசை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.



நியூயார்க்,


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கி உள்ளது. அதில் இருந்து, எமெலிண்டா பவுலினோ டி ரிவாஸ் என்ற பெண் இறங்கி உள்ளார்.

அவர் சக்கர நாற்காலி ஒன்றின் உதவியுடன் சென்றுள்ளார். எனினும், அவரது சக்கர நாற்காலியின் சக்கரங்கள் சூழலாமல் இருந்து உள்ளன.

இதனை அமெரிக்க சுங்க துறை கவனித்து உள்ளது. இதனை தொடர்ந்து, அந்த சக்கர நாற்காலியை எக்ஸ்ரே பரிசோதனை செய்ய சுங்க துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதில், நான்கு சக்கரங்களிலும் வெள்ளை நிற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. 28 பவுண்டு எடையுள்ள கொக்கைன் என்ற போதை பொருளை அந்த பெண் கடத்தி சென்றுள்ளார்.

இவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைக்காக அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்