டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ள பெண்? - எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்
|டுவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுத்து விட்டதாக அண்மையில் எலான் மஸ்க் தெரிவித்தார்.
வாஷிங்டன்,
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு பெண் பதவியேற்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், அடுத்த 6 வாரங்களில் அவர் பதவியேற்பார் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த பெண் யார் என்ற தகவலை எலான் மஸ்க் ரகசியமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் என்.பி.சி. யூனிவர்சல் ஊடக நிறுவனத்தின் விளம்பரத்துறை தலைவரான லிண்டா யாக்கரீனோ தான் டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ. என பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லிண்டா யாக்கரீனோ என்.பி.சி. யூனிவர்சல் ஊடக நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். விரைவில் டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.