< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; வைரலான வீடியோ
உலக செய்திகள்

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; வைரலான வீடியோ

தினத்தந்தி
|
19 July 2022 7:46 AM GMT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் வேன் ஒன்று கவிழ்ந்த திகில் காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன.



நியூயார்க்,



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாலை ஒன்றில் வரிசையாக கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்றிரவு அந்த பகுதியில் சாலையில் திடீரென பெரிய அளவில் இயற்கையாக பள்ளம் ஒன்று உருவானது.

இதனால், அந்த பெரிய பள்ளத்திற்கு அருகில் நிறுத்தி இருந்த வேன் ஒன்று தள்ளாடியபடி, அதில் கவிழ்ந்தது. அந்த வேனுக்கு முன்னால் கார் ஒன்று நின்றிருந்தது. அந்த காரின் பின்பக்க சக்கரங்கள் பள்ளத்திற்குள் விழுவது போன்று ஆட்டம் காட்டின.

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது. அதனை 1.9 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து உள்ளனர். 2,200 பேர் லைக் செய்துள்ளனர்.



மேலும் செய்திகள்