< Back
உலக செய்திகள்
இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது - இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்
உலக செய்திகள்

இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது - இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்

தினத்தந்தி
|
16 Oct 2023 4:48 AM IST

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அவர்களில் 190 பேர் ஹமாஸ் படையினருடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் நிலையில், இதுவரை 55 மேற்கு கரை பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்