< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈராக்கில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ
|14 Jun 2024 7:29 AM IST
எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
பாக்தாத்,
ஈராக்கின் வடக்கு பிராந்தியமான எர்பில் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று செயல்படுகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த ஆலை வழக்கம்போல் இயங்கியது. அப்போது அந்த ஆலையின் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.