< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் சோதனையின்போது வெடித்து சிதறிய ராக்கெட்
|15 July 2023 3:50 AM IST
எதிர்பாராத விதமாக அந்த ராக்கெட் என்ஜின் வெடித்து சிதறியது.
டோக்கியோ,
ஜப்பானின் அகிடா மாகாணம் நோஷிரோவில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு எப்சிலன் எஸ் என்ற சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான சோதனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ராக்கெட் என்ஜின் வெடித்து சிதறியது.
இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.