< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
புருண்டி: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலி
|24 Dec 2023 7:51 AM IST
புருண்டி நாட்டிற்கு அருகே காங்கோ அமைந்துள்ளது.
நெய்ரொபா,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு புருண்டி. இந்நாட்டின் அருகே காங்கோ அமைந்துள்ளது. இதனிடையே, புருண்டி நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், அண்டை நாடான காங்கோவை தலைமையிடமாக கொண்டு ரெட்-தபரா என்ற கிளர்ச்சிக்குழு புருண்டி நாட்டிற்குள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், புருண்டி நாட்டின் லேக் தங்ஹங்கியா நகரில் உள்ள விஹுஜி என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ரெட்-தபரா கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.