< Back
உலக செய்திகள்
இசையின் வேகத்திற்கு ஈடாக சுழன்று, சுழன்று ஆடிய வாலிபரின் சொக்க வைக்கும் நடனம்
உலக செய்திகள்

இசையின் வேகத்திற்கு ஈடாக சுழன்று, சுழன்று ஆடிய வாலிபரின் சொக்க வைக்கும் நடனம்

தினத்தந்தி
|
12 Oct 2022 11:52 AM IST

அமெரிக்க வாலிபர் ஒருவர் இசையின் வேகத்திற்கு ஈடாக சுழன்று, சுழன்று ஆடிய நடனம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோரை ஈர்த்து உள்ளது.



நியூயார்க்,


அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் மேத்யூ டிலோச். தொழில்முறை நடன கலைஞரான இவர் யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிசியாக இருப்பவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 61.9 ஆயிரம் பேரும், டிக்டாக்கில் 5 லட்சம் பேரும் பின்தொடர்பவர்களாக உள்ளனர்.

அதில் நடனம் சார்ந்த பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதில் அவர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்து உள்ளது.

முதலில், தரையில் நின்றபடி இசைக்கேற்ப மெதுவாக சுழன்று ஆடுகிறார். இதன்பின் இசையின் வேகம் அதிகரிக்க தொடங்குகிறது. அதற்கேற்ப மேத்யூவும், விரைவாக சுழன்று சுழன்று ஆடுகிறார்.

இந்த வீடியோவில், நடனத்தின் இறுதியில் கடுமையாக போராடினேன். ஆனால், காலின் கீழ்பகுதி தரையை தொடவில்லை என அவர் தலைப்பிட்டு உள்ளார். அவரது இந்த விரைவான சுழன்றபடி ஆடிய நடனம் சமூக ஊடக பயன்பாட்டாளர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இந்த வீடியோவை 8.31 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். 4,600 பேர் விமர்சனங்களையும் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும்போதே எனது பாதங்கள் வலித்தன என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

6-வது முறையாக வீடியோவை பார்க்கிறேன். நடன நிறைவில் அவரது புன்சிரிப்பு மிக அழகாக உள்ளது. சுழன்று ஆடியது அற்புதம் என மற்றொருவர் தெரிவித்து உள்ளார். இவர் மட்டுமின்றி பலரும், அவரை போன்று பல முறை இந்த வீடியோவை கண்டு களித்து உள்ளனர்.

அவர்களில் ஒருவர், 20 வினாடிகளில் மேத்யூ 45 முறை சுழன்று ஆடியுள்ளார். தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக இந்த தகவல் என தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்