< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
உலகின் மிக துல்லியமான தகவல் ஆதாரமாக டுவிட்டரை மாற்ற திட்டம்

14 Jun 2023 6:28 AM IST
உலகின் மிக துல்லியமான தகவல் ஆதாரமாக டுவிட்டரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலக பணக்காரரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கிய பின்பு டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார். இதில் தவறான தகவல்களை கையாள்வதில் அவர் மேற்கொண்ட அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இதனையடுத்து டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக லிண்டா யாகரினோ என்ற பெண் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது லிண்டா யாகரினோ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டுவிட்டர் 2.0-க்கான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் டுவிட்டரை உலகின் மிக துல்லியமான நிகழ்நேர தகவல் ஆதாரமாக மாற்றும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறி உள்ளார்.