< Back
உலக செய்திகள்
கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட நபர்..!

கோப்புப்படம் 

உலக செய்திகள்

கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட நபர்..!

தினத்தந்தி
|
23 Aug 2022 5:01 PM IST

கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர், கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கானா,

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயி. ஆப்ரிக்க நாடான கானாவில் வசித்துவருபர் கோபி அட்டா. இவர் ஒரு விவசாயி.

34 வயதான இவர், தூங்கிக்கொண்டிருந்தபோது இவருக்கு ஆட்டை வெட்டுவது போன்ற கனவு வந்துள்ளது. அப்போது அவர் கையில் இருந்த கத்தியைக்கொண்டு தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார்.

இதையடுத்து வலியால் கனவு கலைந்தது. உடனே தனக்கு நேர்ந்த அவலத்தை நினைத்து பதறிவிட்டார். ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோபியை அவரது சுற்றத்தார் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

நல்ல வேளையாக அவரது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது ஓய்வில் உள்ள அவர் தன் கையில் எப்படி கத்தி வந்தது என்றும், நான் எப்படி இதை செய்தேன் என தெரிவில்லை என்று கூறியுள்ளார்.

இவருக்கு மேற்படி ஒரு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்து சுமார் ஒன்றரை மாதம் முறையாக ஓய்வெடுத்தால் இயல்பாக செயல்பட தொடங்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்