< Back
உலக செய்திகள்
செய்தியாளரின் இயர்போனை திருடிய கிளி....நேரலையில் பதிவான வேடிக்கை சம்பவம்
உலக செய்திகள்

செய்தியாளரின் இயர்போனை திருடிய கிளி....நேரலையில் பதிவான வேடிக்கை சம்பவம்

தினத்தந்தி
|
5 Nov 2022 3:52 PM IST

சிலி நாட்டு செய்தியாளரின் இயர்போனை கிளி ஒன்று திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.

சிலி,

சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவரின் இயர்போனை கிளி ஒன்று திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.

நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளர், ஒரு சம்பவத்தை பற்றி சாலையோரம் நேரலையில் தகவல்களை பகிர்ந்துகொண்டு இருந்தார். அப்போது, ஒரு கிளி அவரின் தோளில் வந்து அமர்ந்து, அவரது ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.

இதனால், சிறிதுநேரம் அந்த செய்தியாளர் இயர்போனை எடுத்துச்சென்ற கிளியை தேடியவாறு தகவல்களை கூறிக்கொண்டு இருந்தார். நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் உடனடியாக வைரலாகியது.

மேலும் செய்திகள்