ஜப்பான் முன்னாள் பிரதமரை சுட்ட நபரை துரத்திப் பிடித்த போலீசார்
|முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஷின்சோ அபேக்கு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது.
இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபேவை சுட்ட நபரை ஜப்பான் போலீசார் துரத்திச் சென்று விரட்டிப் பிடித்தனர். அவரி சுட்ட நபர் தானே தயாரித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.பிடிபட்ட சந்தேக நபர், யமகாமி டெட்சுயா(40) நாராவைச் சேர்ந்தவர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறத்து ஜப்பான் போலீசார் கூறுகையில், துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது.உடனடியாக அவருக்கு இரத்தம் வந்ததையெடுத்து அபேவிற்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஷின்சோ அபேக்கு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:-
அபே "என்னுடைய உண்மையான நண்பர் மிக முக்கியமாக, அமெரிக்காவுக்கு .அவரை மிகவும் நேசித்த மற்றும் போற்றிய ஜப்பானின் அற்புதமான மக்களுக்கு இது மிகப்பெரிய வேதனையாகும். ஷின்சோ மற்றும் அவரது அழகான குடும்பத்திற்காக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்! என கூறி உள்ளார்.