< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ராட்சத திமிங்கலம்
|20 Oct 2022 2:43 PM IST
மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது.
டெக்சாடா,
மேற்கு கனடாவின் டெக்சாடா தீவில் சிக்கிய ராட்சத திமிங்கலம் ஒன்று மீண்டும் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட இந்த திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது.
கயிற்றில் திமிங்கலம் சிக்கிக்கொண்டதாக வந்த தகவலை அடுத்து வந்த மீட்புக் குழுவினர், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கேப்டன்களின் உதவியுடன் திமிங்கலத்தைப் பின்தொடர்ந்து சென்று அதை கயிற்றில் இருந்து விடுவித்து மீண்டும் கடலுக்குள் விட்டனர்.