< Back
உலக செய்திகள்
ஆமதாபாத்திலிருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்
உலக செய்திகள்

ஆமதாபாத்திலிருந்து துபாய் சென்ற விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்

தினத்தந்தி
|
6 Dec 2023 2:02 AM IST

இதைப்போன்று கடந்த மாதமும் கராச்சியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கராச்சி,

ஆமதாபாத்திலிருந்து போயிங் 737 ஸ்பேஸ் ஜெட் விமானம் துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக அந்த நபர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அந்த நபர் யார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதைப்போலவே கடந்த மாதம் 23-ம் தேதி அன்று ஐதராபாத் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்