< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் தொழிற்சாலை குப்பை கிடங்கில் தொடர்ந்து எரியும் தீ
|6 March 2024 7:52 AM IST
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி ஆங்காங்கே வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே அங்கு கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தீயை அணைக்கும் பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.