< Back
உலக செய்திகள்
பின்லாந்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்; சுற்றுலா சென்ற மாணவர்கள் உள்பட 27 பேர் காயம்
உலக செய்திகள்

பின்லாந்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்; சுற்றுலா சென்ற மாணவர்கள் உள்பட 27 பேர் காயம்

தினத்தந்தி
|
11 May 2023 5:52 PM IST

பின்லாந்து நாட்டில் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் சுற்றுலா சென்று, திரும்பிய மாணவர்கள் உள்பட 27 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டில் தலைநகர் ஹெல்சின்கிக்கு வெளியே, எஸ்பூ என்ற நகர பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்து உள்ளது.

இதில், சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் உள்பட 27 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

எனினும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதுவும் இல்லை என ஹெல்சின்கி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த பகுதியில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்