< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்
|26 May 2023 4:37 AM IST
ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடத்தில் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கான்பெரா,
மேற்கு ஆஸ்திரேலியாவின் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள கார் பார்க்கிங்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பள்ளி கட்டிடங்கள், கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அவன் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன் என்பதும் தெரிய வந்தது. எனவே சிறுவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.