< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்

தினத்தந்தி
|
11 March 2024 5:26 AM IST

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது.

வாஷிங்டன்,

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது.

Live Updates

  • 11 March 2024 7:57 AM IST

    சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ஓப்பன்ஹெய்மர்

    சிறந்த திரைப்படத்திற்கான (Best Picture) ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்பி நடிப்பில் வெளியான ஓப்பன்ஹெய்மர்  திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

  • 11 March 2024 7:53 AM IST

    சிறந்த நடிகை:

    சிறந்த நடிகைக்கான (Best Actress) ஆஸ்கர் விருதை நடிகை இமா ஸ்டோன் வென்றுள்ளார். புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை இமா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

  • 11 March 2024 7:50 AM IST

    சிறந்த இயக்குனர்:

    சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்காக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றார். 

  • 11 March 2024 7:44 AM IST

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிலியன் மர்பி. ஓப்பன்ஹெய்மர் படத்தில் நடித்ததற்காக சிலியன் மெர்பிக்கு  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

  • 11 March 2024 7:40 AM IST

    சிறந்த ஆவண திரைப்படம்

    சிறந்த ஆவண திரைபப்டத்திற்கான (Best Documentary Feature) ஆஸ்கர் விருதை 20 டேஸ் இன் மரியப்போல் (20 Days in Mariupol) ஆவணப்படம் வென்றுள்ளது

  • 11 March 2024 7:38 AM IST

    சிறந்த ஆவண குறும்படம்:

    சிறந்த ஆவண குறும்படத்திற்கான (Best Documentary Short) ஆஸ்கர் விருதை தி லாஸ்ட் ரிபெர் ஷாப் (The Last Repair Shop) குறும்படம் வென்றுள்ளது

  • 11 March 2024 7:36 AM IST

    சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

    சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான (Best Live Action Short) ஆஸ்கர் விருதை தி வொண்டர்புல் ஸ்டோரி ஆப் ஹெண்ட்ரி சுகர் (The Wonderful Story of Henry Sugar) குறும்படம் வென்றுள்ளது. 

  • 11 March 2024 7:34 AM IST

    சிறந்த ஒலி அமைப்பு

    சிறந்த ஒலி அமைப்புக்கான (Best Sound) ஆஸ்கர் விருதை புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் வென்றுள்ளது.

  • 11 March 2024 7:12 AM IST

    சிறந்த துணை நடிகை

    சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) ஆஸ்கர் விருதை தி ஹொல்ட் ஓவர் (The Holdovers) திரைப்படத்திற்காக டாவினி ஜாய் ரண்டொல்ப் வென்றார்.

  • 11 March 2024 7:06 AM IST

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்:

    சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான (Best Animated Feature) ஆஸ்கர் விருதை தி பாய்ஸ் அண்ட் தி ஹிரோன் (The Boy And The Heron) திரைப்படம் வென்றது. 

மேலும் செய்திகள்