< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: 90 பேர் பலி
|4 March 2024 4:12 AM IST
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 30,410 ஆக உயர்ந்துள்ளது.
காசா,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இந்த போர் சுமார் 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போரை நிறுத்துவதற்கு கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் சமரச முயற்சி செய்தன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்தநிலையில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன்மூலம் இந்த போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்தது. மேலும் இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.