< Back
உலக செய்திகள்
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி
உலக செய்திகள்

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி

தினத்தந்தி
|
22 Jan 2023 5:01 PM IST

அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

சீன நாட்காட்டியின் படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று (அந்நாட்டு நேரப்படி இரவு 10.30 மணி) சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்