< Back
உலக செய்திகள்
துருக்கி: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி
உலக செய்திகள்

துருக்கி: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி

தினத்தந்தி
|
17 Jan 2024 4:51 AM IST

துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

அங்காரா,

துருக்கி நாட்டின் முஹ்லா மாகாணம் மர்மரிஸ் மாவட்டத்தில் இருந்து மெர்டின் மாகாணம் நோக்கி பஸ் நேற்றிரவு சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 39 பேர் பயணித்தனர்.

மெர்சின் மாகாணம் யென்கஸ் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் சாலைநடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி தலைகுப்பற கவிழ்ந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்