< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிலி நாட்டில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதி 8 பேர் பலி
|28 Jun 2023 12:55 AM IST
சிலி நாட்டில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
சாண்டியாகோ,
தென் அமெரிக்க நாடான சிலியின் மவுலே பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென பழுதானதால் இந்த மினி லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பின்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக கீழே இறங்கினர். அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் சரியாக வாகனங்கள் தெரியவில்லை என கூறப்படுகிது.
இந்தநிலையில் அதே வழியாக மற்றொரு கார் வேகமாக சென்றது. சாலை வளைவில் நின்று கொண்டிருந்த இந்த வாகனங்களை கவனிக்காமல் அதன் மீது கார் வேகமாக மோதியது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.