< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்தல்
உலக செய்திகள்

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்தல்

தினத்தந்தி
|
4 Oct 2022 11:28 AM IST

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கலிபோர்னியா:


அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், ஆபத்தானவர்கள் எனவும் கூறிய போலீசார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்